book

Written by S NAGARAJAN

Date: 6 September 2016

Time uploaded in London: 5-56 AM


Post No.3126

Pictures are taken from various sources; thanks.



2-9-2016  பாக்யா இதழில் அறிவியல் துளிகள்  தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
விண்வெளியிலிருந்து விழுந்த வீரர்கள்!
.நாகராஜன்


Fallen_Astronaut



அபாயம் என்பது விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதி! விண்வெளிப் பயணத்தில் உள்ள சவால்களைத் துணிச்சலாக எதிர்கொண்ட விண்வெளி வீரர்களை நாம் நினைவில் இருத்திப் போற்றுகிறோம்      - நினைவு நாளின் போது விண்வெளி வீராங்கனை ஐலீன் காலின்ஸ்

விண்வெளி சரித்திரம் விந்தையான தியாகங்கள் நிறைந்த ஒன்று.
சுமார் 45 ஆண்டுகளூக்கு முன்பு 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி அபல்லோ விண்கலத்தில் சந்திரனுக்குச் சென்ற டேவ் ஸ்காட் மற்றும் ஜிம் இர்வின் ஆகியோர் தரை நிலையத்திலிருந்து  தங்களுக்குக் கட்டளை இடப்படாத ஒரு சிறிய சடங்கை சந்திரனிலிருந்து கிளம்பும் முன்னர்  தாங்களாகவே செய்து முடித்தனர். எந்த ஒரு காமராவின் கண்ணிலும் படாமல் அவர்கள் இதைச் செய்து முடித்தனர்.

சந்திரனின் மேற்பரப்பில்விழுந்த வீரர்கள்என்ற பொருள் படும்  ‘FALLEN ASTRONAUTS’ என்ற வாசகங்களை எழுதி ஒரு நினைவுச் சின்னத்தை வைத்தனர். இந்தச் சின்னத்த்தில் அமெரிக்க மற்றும் ரஷிய விண்வெளி வீரர்களின் 14 பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.மனித வரலாற்றில் விண்வெளிப் பயணம் தொடங்கியதிலிருந்து விண்வெளி வெற்றிக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த விண்வெளி வீரர்களின் பெயர்கள் தாம்  வை எட்டரை செண்டிமீட்டரில் ஒரு அலுமினிய சிற்பமானது பால் வான் ஹோய்டொன்க் என்பவரால் செய்யப்பட்ட்து. அபல்லோ 15 பயணத்திற்கு முன்னர் இந்த சிற்பியை விண்வெளி வீரர் ஸ்காட் ஒரு இரவு விருந்தில் சந்தித்தார். அங்கு தான் அந்தச் சிற்பி ஒரு சிறிய நினைவுச் சின்னத்தைச் செய்ய ஒப்புக் கொண்டார். அதில் ஒரு விண்வெளி வீரர் விண்வெளி உடையில் இருப்பது போல சித்தரிக்கப்பட்டது. சிறபம் இலேசாக எடை அதிகமின்றி செய்யப்பட்டது. ஆனால் சந்திரனில் ஏற்படும் மிக அதிக உஷ்ணநிலையையும் தாங்கும் படி வடிவமைக்கப்பட்டது. இதை பயணம் வெற்றிகரமாக முடியும் வரை ரகசிய்மாக வைத்திருப்பதாக இருவரும் முடிவு செய்தனர். பயணம் வெற்றிகரமாக முடிந்த பின்னர் பூமிக்குத் திரும்பிய பின்னர் தான் ஸ்காட் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் இதை வெளிப்படுத்தினார்.

நினைவுச் சின்னத்தையும் அதில் பொறிக்கப்பட்ட பெயர்களையும் கொண்ட ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுக்கப்பட்டிருந்தது.

இந்தச் சிறிய சடங்கு, அந்தச் சின்னத்தில் பொறிக்கப்பட்ட பெயர்கள் ஆகியவற்றால் உத்வேகம் பெற்று FALLEN ASTRONAUTS என்ற புத்தகத்தை விண்வெளி சரித்திரத்தை எழுதி வரும் எழுத்தாளர்களான காலின் பர்கெஸ், கேட் டூலன் மற்றும் பெர்ட் விஸ் ஆகியோர் எழுதி இப்போது வெளியிட்டுள்ளனர்.


Fallen Astronauts Memorial

இந்த 14 வீரர்களின் வரலாறையும் இந்தப் புத்தகம் விரிவாகச் சொல்கிறது. இவர்கள் எப்படி இன்னுயிரைத் தியாகம் செய்ய நேர்ந்தது என்பதை நூல் உருக்கமாக விளக்குகிறது இவர்களில்  பலர் விண்ணில் பறக்கும் போது இறக்கவில்லை.

விளாடிமிர் கொமாரோவ் தனது சோயுஸ் 1 கலம் பிரதான பாராசூட் சரியாக வேலை செய்யாததால் விபத்துக்குள்ளாகி பூமியில் மோதி மரணமடைந்தார்.
சோயுஸ் 11 கலமானது சல்யுட் என்ற விண்வெளி ஸ்டெஷனிலிருந்து விடுபட்டு வெளி வரும் போது ஒரு கசிவினால் காபினில் அழுத்தம் குறைந்து போகவே மூச்சுத் திணறி மரணமடைந்தனர்.

அபல்லோ 1 விண்கலப் பயணத்தை மேற்கொள்ளவிருந்த கஸ் க்ரிஸாம், எட் ஒய்ட், ரோஜர் காஃபீ ஆகியோர் பறப்பதரற்கு முன்னாலேயே தரை சோதனை ஒன்றின் போது விபத்துக்குள்ளாகி இறந்தனர்.

மற்ற அனைவரும் விமான விபத்து, நோய்வாய்ப்படல், கார் விபத்து ஆகியவற்றால் மரணமடைந்தனர். இதில் முதன் முதலாக விண்ணீல் பறந்த யூரி ககாரின் விமான விபத்து ஒன்றில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இது தவிர இன்னும் பல வீரர்களும் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் பெயர்கள் சந்திரனில் உள்ள நினைவுப் பலகையில் இல்லை.

உதாரணமாக ரஷிய வீரர் க்ரிகோர் நெல்யுபோவ் என்ற ரஷிய வீரரைக் கூறலாம். 1963இல் இராணுவ பாதுகாப்பு ரோந்துப் படையுடன் ஏற்பட்ட மோதலால் இவர் விண்வெளித் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டார். 1966இல் ரயில் முன் குதித்ததாலோ அல்லது தற்செயலாக ரயிலின் முன்னால்  வீழ்ந்ததாலோ மரணமடைந்தார். 1986ஆம் ஆண்டு வரை இவரை ரஷியா விண்வெளி வீரராக அங்கீகரிக்கவில்லை.
 இப்படி பல சுவையான விஷயங்களை ஃபாலன் அஸ்ட்ரானட்ஸ் நூல் தருகிறது. நூலின் விலை 2300 ரூபாய்!
ஆண்டு தோறும் நினைவு நாள் என்று ஒரு நாளை அமெரிக்கா அனுசரித்து வருகிறது. அன்று விண்வெளிப் பயணத்திற்காக தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்தோரை நினைவு கூர்ந்து அஞ்சலி செய்கிறது.  இதில் நாஸாவில் பணிபுரியும் அனைவரும் கலந்து  கொள்வது வழக்கம்.
 இந்த விண்வெளி வீரர்களின் நினைவைப் போற்றி நாமும் கூட அஞ்சலி செய்வோமே!

 newton apple

அறீவியல் அறிஞர் வாழ்வில் ..

பிரபல விஞ்ஞானியான ஐஸக் நியூட்டன் வாழ்வில் ஏராளமான சுவையான சம்ப்வங்கள் உண்டு. அவற்றில் சில:
ஐஸக் நியூட்டனின் இளம் வயதில் நடந்தது இது. மற்ற சிறுவர்கள் எல்லோரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் விளையாடாமல் ஐஸக் நியூட்டன் மரத்தால் பல்வேறு  மாடல்களில் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருந்தார். இந்த மாடலில் ஒரு காற்றாலை  (windmill) மாடலும் அடக்கம். இதை வீட்டின் கூரையில் பொருத்திப் பார்த்த போது அற்புதமாக அது வேலை செய்தது!

சிறுவனாக இருந்த போதே அவர் ஒரு ஒரிஜினல் டார்ச் லைட்டைத் தானாகவே செய்தார். பேப்பரினால் ஆன இது மடக்கி வைத்துக் கொள்ளக் கூடியது. அதைத் தன் பாக்கெட்டில் மடித்து வைத்துக் கொள்வார் அவர். பள்ளிக்குச் செல்லும் போது காலையில் இருள் சூழந்த குளிர்காலத்தில் அவர் இதை உபயோகிப்பது வழக்கம்!

newton 3

சின்ன வயதிலேயே ‘சன் டயல் என்ப்படும் சூரிய கடிகாரத்தில் அபார மோகம் நியூட்டனுக்கு! அவர் அறை முழுவதும் சூரிய ஒளியால் நேரத்தைக் காட்டும் அடையாளங்கள் ஆங்காங்கே குறிக்கப்பட்டிருக்கும். இதனால் மணி, அரை மணி, கால் மணி உட்பட குறித்த நேரத்தை அவரால் சரியாக அறிய முடிந்தது. இதனால் சூரிய கணநிலை நேரம், சம இரவு நாள் உள்ளிட்ட அனனத்தையும் அவர் அறிந்தார்.

விஞ்ஞானியாக இருந்த போதே அரசாங்கத்தின் நாணயசாலைக்கு அவர் பெரிதும் உதவினார். போலி நாணயங்கள் பிரிட்டனில் உலவி வந்ததை நீக்க வழிமுறைகளைக் கண்டு கண்காணிப்பாளராக இருந்ததோடு தீவிரமான சீர்திருத்த  முறைகளை அமுல் படுத்தி கள்ள நாணயங்களை அவர் அறவே ஒழித்தார்.

newton 1

அவர் வாழ்வில் சுவையான சம்பவங்கள் இது போல இன்னும் ஏராளம் உண்டு!

**********************
0

Add a comment

Loading